எலும்பு வலுவா இருக்கனுமா? இந்த உணவுகளை தவறாம உணவில் சேர்த்துக்கோங்க.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் ஆகும்.  நமது உடலை வடிவமைக்கும் எலும்புகள், அத்தியாவசிய தாதுக்களை சேமிக்கின்றன. எலும்பு ஆரோக்கியமாக இருக்க இரும்புச்சத்து முக்கியமானது.

எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

உடல் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியமான ஒரு தாதுவாகும். இது, உடல் முழுவதும் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை சுமந்து செல்ல உதவி புரிகிறது. இரும்புச்சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சருமம், தலைமுடி மற்றும் நகங்களுக்கும் பங்களிக்கிறது

✅ஈரல்

அசைவ உணவுகளில் ஈரலில் 17.9% இரும்புச்சத்து உள்ளது. முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் இரும்புச்சத்தை அதிகம் பெறுவதற்கு மாமிச உணவுகளில் ஈரலை சாப்பிடுவது பலனளிக்கும்.

உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வலுப்படுத்த விரும்பினால், ஈரல் சரியான தேர்வாக இருக்கும்.

✅பூசணி விதைகள் 

பூசணி விதைகள் இரும்புச்சத்துக் கொண்ட பொக்கிஷம் ஆகும். இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் கே, துத்தநாகம் மற்றும் மாங்கனீஸின் நல்ல மூலமான பூசணி விதைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 1 அவுன்ஸ் பூசணி விதைகளில் 14% இரும்பு உள்ளது.

எனவே பூசணி விதைகளை உட்கொள்வது எலும்புகளுக்கும் தலைமுடிக்குக்கும் நன்மை பயக்கும்.

✅டோஃபு 

டோஃபுவில் போதுமான அளவு புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளன. 100 கிராமில் டோஃபூவில் 3.4 கிராம் இரும்புச்சத்து உள்ளது. டோஃபு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வது நிற்கும்.

அதிலுள்ள புரதம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். பாலில் இருந்து கிடைக்கும் பனீரைப் போலவே சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபுவும் உடலுக்கு நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.