தீராத இருமலை போக்கும் கசாயம்.

பொதுவாகவே குளிர் காலம் வந்து விட்டாலே அனைவருக்கும் சளி, இருமல் மற்றும் தடிமன் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் வந்து விடும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டாலே அனைவருக்கும் பரவி விடும்.

இவ்வாறு பரவினாலுமே உடனடியாக நீக்குவதற்கு சிறந்தது என்றால் அது வீட்டு வைத்தியமாக தான் இருக்கும்.

ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சளி மற்றும் இருமலை விரட்டும் கசாயம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

📌தேவையான பொருட்கள்

👉இஞ்சி - ஒரு துண்டு

👉துளசி - அரை கைப்பிடி

👉தேன் - 3 ஸ்பூன் 

📌செய்முறை

முதலில் இஞ்சியை நன்கு இடித்து சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும்.  

அடுத்து துளசியை இடித்து அதன் சாற்றையும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

இறுதியாக பிழிந்து வைத்த இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து, அதில் தேன் சேர்த்து அப்படியே குடிக்கலாம்.

📌எவ்வளவு குடிக்க வேண்டும்?

👉ஒரு வயது முடிந்த குழந்தைகள் அரை ஸ்பூன் குடிக்கலாம்.

👉3-5 வயது குழந்தைகள் 1 ஸ்பூன் குடிக்கலாம்.

👉5-8 வயது குழந்தைகள் 2 ஸ்பூன் குடிக்கலாம்.

👉8-12 வயது குழந்தைகள் 3 ஸ்பூன் குடிக்கலாம்.

👉நடுத்தர வயது கொண்டவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.