மாதுளையில் இத்தனை நன்மையா?

மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கல்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் மாதுளம்பழத்தை சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. 

✅ உடல் வலிமை பெறும்

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வரும் போது உடல் வலிமை பெறும்.

✅இதயமும், மூளையும் வலிமை பெறும்

இனிப்பு மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் பித்தம், இருமல் ஆகியவற்றை போக்கும்.

புளிப்பு மாதுளை சாப்பிட்டால் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றும் மற்றும் வயிற்றுக்கடுப்பு நீங்கும். சருமத்தை பராமரிக்கக்கூடியதில் மிகவும் முக்கியமானது வைட்டமின் ஈ. இது மாதுளம் பழத்தில் அதிகம் இருக்கிறது.

✅உடல் குளிர்ச்சியாக இருக்கும்

இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் இவற்றின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு சேர்த்து குளித்தாலும் அல்லது முகத்தில் பூசிக்கொண்டாலோ உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் நீங்கும்.

✅மாதவிடாய் பிரச்சினை நீங்கும்

மாதுளம் பழம் சாற்றை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வரும்போது மாதவிடாய் பிரச்சினை நீங்கும்.

✅தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்

மாதுளை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்கிறது. இதில் உள்ள தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரச்செய்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.