பாதைகள் வேறு, பயணங்கள் வேறு

இந்த உலகில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு , பயணங்கள் வேறு, தேவைகளும் வேறு.

தேவைகள் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றன.

ஆனால் இது புரியாமல் சில நேரங்களில் ஒருவர் மற்றவரை பார்த்து அவர்களை போல் வாழ வேண்டும் என்று நினைத்து ஆசைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொள்கிறோம்

நமக்கு தேவைப்படும் அனைத்தும் நம்மிடம் இருந்தும் கூட அதன் அருமை புரியாமல் அடுத்தவர்களைப் பார்த்து ஆசைகளால் ஏங்குகிறோம்.

இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் அதற்கான தேவைகளை அவைகளே நிறைவேற்றிக் கொள்ளும் படிதான் இறைவன்  படைத்து இருக்கிறார்.

நிச்சயமாக உங்கள் தேவைகள் அனைத்தும்  நிறைவேறும்.

நீங்கள் எதைப்பற்றி அதிகமாக அழுத்தமாக நினைக்கிறீர்களோ அது கண்டிப்பாக உங்களை தேடி வரும்.

நம்பிக்கையுடன் நல் வார்த்தைகளை உங்களுடன் நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.