முடி உதிர்வை தடுப்பதற்கு இந்த ஒரு இலை போதும் - எப்படி பயன்படுத்துவது?

 

கொய்யா பழத்தின் இலைகள் தலைமுடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். கொய்யா இலைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இயற்கையான நன்மை கொண்ட கொய்யா இலைகளை தலைமுடிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். தலைமுடிக்கு கொய்யா இலைகளை பயன்படுத்தும் போது அது அற்புதமான நன்மைகளைத் தருகிறது.

மேலும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.

தலைமுடிக்கு கொய்யா இலைகள்

கொய்யா இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.

கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பால் தலைமுடி வளர்ச்சியடைவது மட்டுமின்றி அடர்த்தியான தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் தலைமுடி தண்டுகள் மென்மையாகக் கூடும்.

கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் சி வேர்களை வலிமையாக்குகிறது மற்றும் முடி உதிர்வதைக் குறைக்கிறது.

மேலும் இந்த இலைகள் தலைமுடி மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும்படி எண்ணெய்ப் பசையைத் தடுக்கும்.

கொய்யா இலைகளின் திரவம் தலைமுடியை கருமையாக்கிடும். நரை முடி மட்டுமின்றி புதிதாக வளரும் முடியை கருமையாகவும், பளபளப்பாகவும் செய்திடும்.

📌பயன்படுத்தும் முறை

👉ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை 500 மில்லி தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் குளிர வைக்கவும்.

👉இந்த திரவத்தை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம்.

முடி உதிர்வை தவிர்க்க அல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்பினால் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இந்த திரவத்தை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.       

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.