1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்! திடுக்கிட வைக்கும் ஆராய்ச்சி முடிவு

1 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில்  2,40,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக புதிய அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்ல தாகம் எடுக்கும் போது போத்தலில் இருந்து தண்ணீர் எடுத்து குடிக்கும் போது மிகப்பெரிய ஆறுதல் மனதிற்கு கிடைக்கும், ஆனால் அது உங்கள் உடலுக்கு நன்மை செய்வதை விட பல மடங்கு தீமையை செய்வதாக இருந்தால் என்ன செய்வது.

ஆமாம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் கிட்டத்தட்ட 2,40,000 பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலில் மைக்ரோ துகள்கள் இருப்பது இன்னும் தெரிய வரவில்லை என்றாலும், 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் உள்ள நானோ பிளாஸ்டிக் அளவினை புதிய ஆராய்ச்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கொலம்பியா பல்கலைக்கழகம் அதிநவீன லேசர் தொழில்நுட்பம் கொண்டு ஆராய்ச்சி செய்து ஜனவரி 8ம் திகதி வெளியிட்ட முடிவில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 1,10,000 முதல் 3,70,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் 90 சதவீதம் நானோ துகள்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியவரும், ஆராய்ச்சியின் இணை ஆசிரியருமான வெய் மின்(Wei Min) சராசரியாக 1 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலில்  2,40,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உடலில் படியும் பிளாஸ்டிக்

இவை மிக மிக நுண்ணிய துகள்கள் என்பதால் சுவாச பாதைகள், இரத்த நாளங்கள், செரிமான மண்டலங்களில் நுழைந்து அங்கே படிய துவங்குகின்றன.

இதய தசைகள் மற்றும் இரத்த-மூளை தடை பகுதிகளை தாண்டி இவை மூளையை அடைகிறது. அதுமட்டுமின்றி கருப்பையில் இருக்கும் பிறக்காத குழந்தைகளின் உடலுக்குள்ளும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் செல்லக்கூடும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.