புற்றுநோயின் 10 எச்சரிக்கை அறிகுறிகள்.

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், அமெரிக்க புற்றுநோய் சங்கம, புற்றுநோயின் 10 எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த தகவலை கூறியுள்ளது.

மேலும், இந்த 10 அறிகுறிகள் இருந்தால் நேரத்தை வீணடிக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமானது என்று அறிவுறுத்தியுள்ளது. 

✅1. காரணமில்லாத உடல் எடை இழப்பு

எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5kg அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் அடிக்கடி நிகழ்கிறது.

✅2. அடிக்கடி காய்ச்சல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது.

பொதுவாக, காய்ச்சல், இரத்தப் புற்றுநோய் அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

✅3. தீவிரமான உடல் சோர்வு

ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வு புற்றுநோய் பரவும்போது முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.

சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத இரத்த இழப்பை ஏற்படுத்துவதால் உடல் சோர்வு ஏற்படலாம்.

✅4. தோலில் ஏற்படும் மாற்றங்கள்

தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும்.

சருமம் கருமையாகுதல், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், தோல் சிவத்தல், அரிப்பு, அதிகப்படியான முடி வளர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

✅5. மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றங்கள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

✅6. ஆறாத காயங்கள்

இரத்தம் கசியும் மச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும், ஆறாத வாய்ப் புண் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

✅7. இரத்தப்போக்கு

இருப்பும்போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மலத்தில் இரத்தம் தோன்றினால் அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கர்ப்பப்பையின் உட்பரப்பின் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முலைக் காம்பிலிருந்து இரத்த கசிவு வெளிவருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

✅8. உடலில் தடிப்பு அல்லது கட்டிகள்

புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள்மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.

தடிப்பு அல்லது கட்டிகள் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமானது

✅9. விழுங்குவதில் சிரமம்

தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இருப்பினும், இந்த அறிகுறிகள் புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் ஏற்படுகின்றன.

✅10. தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு

தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். 3 வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.       


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.