காற்று மாசினால் இந்த ஆபத்து ஏற்படும்! அதிரவைத்த ஆய்வறிக்கை.

அதிகப்படியான காற்று மாசினால் பக்கவாதம் ஏற்படலாம் என ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

✅ஆய்வறிக்கை

குளிர்காலத்தில் நம் உடலில் ரத்த ஓட்டம் துரிதமாக இருக்காது. இந்த சூழலில் பக்கவாதம் (Paralysis) ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகராக உள்ள டெல்லி குறித்து வெளியான ஆய்வில், நாட்டிலேயே மிக அதிகபட்சமாக காற்று மிக மோசமான தரத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

✅பக்கவாதம்

குளிர்காலத்தில் மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ரத்தத்தை சுமந்து செல்லும் நரம்புகள் சுருக்கமடையும். இதனால் போதுமான அளவுக்கு ரத்த ஓட்டம் இன்றி, ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படலாம்.

வாகனங்கள், வீட்டில் பயன்படுத்தும் எரிபொருள், நம்மை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், ஆலைகள் போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது. இதனால் நைட்ரஜன் ஆக்ஸைடு கலந்த காற்றை நாம் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது. 

இவை தவிர, காட்டுத் தீ அல்லது சுற்றுப்புற பகுதிகளில் பற்றும் தீ போன்றவற்றால் எழும் புகையால் நமக்கு இதய நோய் முதல் பல்வேறு வகையிலான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதுபோல தான் பக்கவாதமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது நம் ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வாய்ப்பு உள்ளதால், இதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படுமாம். 

நுண்ணிய மாசு பொருட்கள் போன்றவை, சுவாசத்தின் வழியாக நம் உடலில் புகுந்து மூளைக்கு செல்கிற ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறது இந்த ஆய்வு.

✅தடுக்க என்ன செய்யலாம்?

இந்தப் பிரச்சனையில் சிக்காமல் இருக்க முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லலாம்.

ஒருநாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதேபோல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

✅குறிப்பு: ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இந்த விடயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.