தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ்

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.

இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அந்தவகையில் உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய டிப்ஸ் குறித்து விரிவாக காணலாம். 

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சைப் பழ சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க தொப்பைக் குறையும்.

எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் தங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

காலை உணவுகளில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மெல்ல மெல்ல குறைய தொடங்கும்.   

குறிப்பாக, காலையில் சுண்டல் போன்ற புரதசத்து நிறைந்த உணவையோ, முட்டை மற்றும் தயிர் போன்ற உணவையோ சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் அரை மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை செய்யலாம்.  

அதேபோல் உட்கார்ந்து எழுதல், படுத்துக்கொண்டே வயிறுடன் கூடிய உடலை எழச்செய்தல், படுத்துக்கொண்டே பெடல் செய்வதுபோல் கால்களை இயக்குதல், தண்டால் போடுவது, கால்களை மேல் இருந்து கீழாக இயக்குவது போன்றவற்றைச் செய்யலாம்.

அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி அதில் ஒரு டம்ளர் நீர் மற்றும் 4 ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்து வர தொப்பை குறைய தொடங்கும்.

வெள்ளரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வெள்ளரிக்காயில் உள்ள அல்கலைன் தொப்பையை குறைக்க பெரிதளவில் உதவுகிறது. 

நெல்லிக்காய் மற்றும் இஞ்சி கலந்த சாறினை தொடர்ந்து குடித்து வர கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மேலும் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதனாலும் தொப்பையை எளிமையாக குறைக்கலாம்.

இரவில் ஜங்க் புட் மற்றும் ஃபாஸ்ட் புட் எனப்படும் சிக்கன் ரைஸ், பீட்சா,பர்கர் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது கெட்ட கொலஸ்ட்ரால் தேங்கி தொப்பை வராமல் தடுக்கும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.