நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள்.

சர்க்கரை நோயை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் வழக்கமான உணவுகளோடு ஆரோக்கியம் மிகுந்த உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள் குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.

கிளைசெமிக் குறியீடு மற்றும் கிளைசெமிக் சுமை அளவை பொறுத்துதான் சர்க்கரை நோயாளிகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் .

✅கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்

55-க்குள் கிளைசெமிக் குறியீடு இருந்தால் அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.

55- 70 அளவிற்குள் கிளைசெமிக் குறியீடு இருந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மீடியமான உணவு.

70-க்கு மேல் கிளைசெமிக் குறியீடு இருந்தால் அது சர்க்கரை நோயாளிகளுக்கு மோசமான உணவாக கருதப்படுகிறது.

✅அன்றாட சாப்பிடும் சில உணவின் கிளைசெமிக் குறியீடு   

👉இட்லி- 60

👉வெள்ளை அரிசி சாதம் - 72

👉கோதுமை- 55- 60

👉மைதா- 70

👉ராகி- 72

👉சிறுதானியம்- 55- 60

👉கேரட்- 92

👉ஐஸ் கிரீம்- 36- 50

👉சுண்டல்- 38

👉உலர் திராட்சை- 64

👉தர்பூசணி- 80

👉சிக்கன்- 0

👉தேங்காய்- 10

👉வேர்க்கடலை- 14

👉முட்டை- 0

👉பன்னீர்- 0

👉பாதம்- 0

கிளைசெமிக் சுமை கொண்ட உணவுகள்

கிளைசெமிக் சுமை 10-க்கும் குறைவாக உள்ள உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவையாகும்.

11- 19-குள் கிளைசெமிக் சுமை இருந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மீடியமான உணவு ஆகும்.

20-க்கும் மேல் கிளைசெமிக் சுமை இருந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மோசமான உணவாக கருதப்படுகிறது.

✅அன்றாட சாப்பிடும் சில உணவின் கிளைசெமிக் சுமை

👉இட்லி- 30

👉வெள்ளை அரிசி சாதம்- 33

👉கோதுமை- 20

👉ராகி- 23

👉கேரட்- 8

👉ஐஸ் கிரீம்- 9.3

👉சுண்டல்- 9.1

👉தர்பூசணி- 4

👉முட்டை- 0

👉பன்னீர்- 0

👉பாதம்- 0

👉சிக்கன்- 0

👉தேங்காய்- 1.5

👉வேர்க்கடலை- 2.2     

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.