சூடான மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

மஞ்சள் பால், நம் முன்னோர்களால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த பாலாகும். மஞ்சளை பாலில் கலக்கும் போது கிடைக்கும் நிறம் காரணமாக இது ‘கோல்டன் மில்க்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களையும் ஆரோக்கிய நன்மைகளுக்காக இதில் சேர்த்து குடிக்கலாம்.

சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி போன்றவையாக இருந்தாலும் மஞ்சள் பால் தான் சிறந்த தேர்வாக இருக்கும். இவைகளுக்கு மாத்திரமின்றி இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் பால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் மற்றைய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1. அழற்சி

மஞ்சளில் குர்குமின் உள்ளது. குர்குமின் வீக்கத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குர்குமினின் அழற்சி எதிர்க்கும். இது பாலுடன் சேருவதால் வலி, வீக்கம் புற்றுநோய், இதய நோய்கள் போன்றவற்றை சீக்கிரம் குறைக்கும்.  

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. 

ஜலதோஷம் மற்றும் காய்ச்சலைத் தடுக்க ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குடிக்கலாம்.

3. சர்க்கரை நோயை குறைக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமின் டைப் 2 நீரிழிவு நோய் வருவதை தடுகிறது. ஆகவே தினமும் பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.  

4. இதய நோய்களை குறைக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமினின் ஆக்ஸிஜனேற்ற பண்பு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு இருதய சிக்கல்களைத் தடுக்கும். ஆகவே பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.

5. புற்றுநோய் வருவதை தடுக்கும்

மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்கும். இது புதிய புற்றுநோய் வளர்ச்சியின் அபாயத்தை திறம்பட குறைக்கிறது. 

6. செரிமானத்தை மேம்படுத்துகிறது

மஞ்சளில் உள்ள குர்குமின், வீக்கத்தைக் குறைத்து, செரிமான அமைப்பைச் சீரமைக்கும். ஆகவே பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.  

7. சருமத்திற்கு நல்லது

காயங்களை ஆற்றும்

முகப்பரு மற்றும் வெடிப்புகளைத் தடுக்கும்

தழும்புகளை குறைக்கும்

இயற்கையான பளபளப்பை தரும்

கருவளையத்தை குறைக்கும்

8. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மஞ்சளில் உள்ள குர்குமின், முடக்கு வாதம் உள்ள நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கிறது மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.  

பால் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதங்கள், வைட்டமின் கே, வைட்டமின் டி போன்றவை கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன.

✅மஞ்சள் பால் செய்வது எப்படி?

ஒரு கிளாஸ் பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அதை 10 முதல் 12 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

தேவைப்பட்டால் இனிப்புக்கு தேன் அல்லது சர்க்கரை சேர்க்கவும். 

மேலதிக ஆரோக்கியத்திற்கு கிராம்பு, இஞ்சி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம். மேலும் இதை வடிக்கட்டி தினமும் குடிக்கலாம்.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.