சிறுநீர் மஞ்சளாக இருப்பது ஏன்?

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன் என்னும் கேள்விக்கு விடை கண்டறியும் முயற்சியில் 150 ஆண்டுகளாக அறிவியலாளர்கள் ஈடுபட்டுவந்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்தக் கேள்விக்கான விடையை தற்போது சில அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

✅அறிவியலாளர் கூறும் ஆச்சரிய தகவல்

இந்த ஆய்வைத் தலைமையேற்று நடத்திய, அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலையில் துணை பேராசிரியராக பணியாற்றும் Brantley Hall, தினமும் உடலில் நடக்கும் இந்த உயிரியல் நிகழ்வுக்கான காரணம் இவ்வளவு நாட்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியம்தான் என்றும், அந்தக் கேள்விக்கான விடையைத் தாங்கள் கண்டுபிடித்ததில் தங்கள் குழுவுக்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். 

✅சிறுநீர் மஞ்சளாக இருப்பது ஏன்?

நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள், தங்கள் ஆயுட்காலமான ஆறு மாதங்கள் முடிவில் மடிகின்றன. நமது கல்லீரல் அந்த இறந்த சிவப்பணுக்களை உடலிலிருந்து அகற்றிவிடும்.

அதன் காரணமாக, ஒரு பிரகாசமான ஆரஞ்சு வண்ண பொருள் உருவாகும். அதன் பெயர் பிலிரூபின். இந்த பிலிரூபின் வயிற்றுக்குக் கடத்தப்படும். வயிற்றிலிருக்கும் சில பாக்டீரியாக்கள் அதை யூரோபிலின் என்னும் மஞ்சள் நிற நிறமியாக மாற்ற, அதுதான் சிறுநீருக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான் தற்போது அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றிலிருக்கும் சில பாக்டீரியாக்கள் உருவாக்கும் பிலிரூபின் ரிடக்டேஸ் என்னும் என்சைமே இந்த மாற்றம், அதாவது, தங்க நிறம் உருவாகுவதற்கு காரணமாக உள்ளது என அறிவியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

✅மஞ்சள் காமாலை

அதிகப்படியான பிலிரூபினை கல்லீரலால் அகற்ற முடியாத நிலையைத்தான் ஜாண்டிஸ் அல்லது மஞ்சள் காமாலை என்கிறோம்.

மஞ்சள் காமாலை நோயாளியின் கண்கள், தோல் முதலானவை மஞ்சளாக தோற்றமளிப்பதற்கு இதுதான் காரணம்.

உண்மையில், இந்த யூரோபிலின் என்னும் ஒரு விடயம் குறித்து 1868இலேயே அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அதற்கும் சிறுநீரின் மஞ்சள் நிறத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க 156 ஆண்டுகள் ஆகியுள்ளன என்பது ஆச்சரியம்தான்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.