கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான 5 வழிகள்

தடுக்கக்கூடிய புற்றுநோய் வகைகளில் முதன்மையாக இருப்பது, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பவாய் புற்றுநோய் தான்.

கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சுத்தமின்மை, உடல் பருமன் ஆகிய காரணங்களும் அதிகரிக்கும்.

கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கான 5 வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

✅உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு, மனதுக்கும் எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்குகிறது.

இதனால் உடலில் ஆற்றல் அதிகரித்து, ரத்தம் மற்றும் ஆக்சிஜன் ஓட்டத்தை மேம்படுத்தி, உறுப்புகளை புத்துணர்ச்சியாக்கி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோய் நோயாளிகளுக்கும் கூட மிதமான உடற்பயிற்சி செய்யப் பரிந்துரை செய்யப்படுகிறது.

✅உணவு முறை

நோய்கள் வாராமல் இருக்க ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக உடலில் ஹார்மோன் குறைபாட்டு நோய்களான அனிமீயா, எலும்புத் தேய்மானம், தைராய்டு உள்ளிட்ட நோய்கள் உண்டாக்கி உடல் பருமனை ஏற்படுத்தும்.

மேலும், உடல் பருமன் கர்ப்பப்பை வாய் கேன்சருடன் தொடர்புடையது. எனவே, உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

✅பரிசோதனை

கர்ப்பவாய் பகுதியில் புற்றுநோய் கட்டிகள் அல்லது செல்கள் உருவாகி இருக்கிறதா என்பதை எளிதாக சோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், புற்றுநோய் பாதிப்பை எளிதாகக் கண்டறிய முடியும்.

✅கருத்தடை மாத்திரை

கருத்தடை மாத்திரை கர்ப்பம் ஏற்படுவதை தள்ளிப்போட உதவும். ஆனால் தொற்று பாதிப்பில் இருந்து தடுக்க உதவாது.

கருத்தடை மாத்திரை உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி தான் கரு தரிக்காமல் இருக்க உதவுகிறது.

இந்த ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வால் உடலில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அதில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

✅பாலியல் உறவு

ஒரு நபருக்கு மேற்பட்டவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது, HPV தொற்றுக்கு வழிவகுத்து, கர்ப்பவாய் புற்றுநோயை அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.        

இதனால், பாலியல் உறவில் ஈடுபடும் போது, பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ள வேண்டும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.