முடி உதிர்தல் எதனால் ஏற்படுகிறது? அதற்கான சில உணவு முறைகள்- மருத்துவரின் கூற்று

முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.

பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

அந்தவகையில் மருத்துவர் அருண்குமார் முடி உதிர்வு எதனால் ஏற்படுகிறது? முடி உதிர்தலை தடுக்கும் உணவு முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

✅மருத்துவரின் கூற்று

ஒரு நாளைக்கு தோராயமாக 100- 150 முடிகள் உதிர்வது என்பது சாதாரணமான ஒன்று.

உடல் எடையை குறைக்க நினைத்து அதற்கான வழிகளை மேற்கொள்பவர்கள் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றன.

உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

தைராய்டு, இரத்த சோகை, வலிப்பு மருந்துகள், இரத்த அழுத்தம் மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

✅உணவு முறைகள்

👉இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்- ஈரல், முருங்கை போன்றவை

👉ஜிங் நிறைந்த உணவுகள்- நட்ஸ், முட்டை போன்றவை

👉சிலினியம் நிறைந்த உணவுகள்- அசைவ உணவுகள்

👉ஒமேகா 3 உணவுகள்- மீன், ஆளி விதை போன்றவை

👉புரத உணவுகள்- பயிறு வகைகள், பால் போன்றவை

👉ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்- பட்டை, கிராம்பு, சீரகம் போன்றவை

👉பயோட்டின் நிறைந்த உணவுகள்- மாத்திரைகள்

👉வைட்டமின்கள்- A,D,E,K நிறைந்த உணவுகள்      

மேற்கண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வை குறைத்து முடி வளர உதவுகிறது என்கிறார் .

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.