கணினியில் வேலை செய்யும் போது தூக்கம் வருதா...? இதை மட்டும் சாப்பிடுங்க போதும்.

பொதுவாகவே அலுவலகத்தில் பணியாற்றும் யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சினையாக இருப்பது சோர்வு தான்.

நீண்ட நேரமாக கணினி முன் இருப்பதால் சோர்வு என்பது கட்டாயம் இருக்க தான் செய்யும். என்ன இப்படி தூக்கம் வருதே.... இரவு நேரத்தில் விழித்து இருக்கிறோம் ஆனால் அலுவலகத்திற்கு வந்தவுடன் ஏன் இப்படி தூக்கம் வருகிறது என பலரும் யோசிப்பார்கள்.

ஆனால் அதற்கு எல்லாம் இனி கவலை வேண்டாம். நீங்கள் புத்துணர்ச்சியுடன் எப்படி செயற்படலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

✅மோர்

காலை 10 முதல் 11 மணிக்குள் குடித்தால் நல்லது. மோரில் ப்ரோபயோடிக் மற்றும் புரொட்டீன் உள்ளது. இது குடிப்பதால் உடலில் ஆற்றல் குறையாமல் இருக்கும், பசி எடுக்காது மற்றும் இது குடிப்பதனால் உடலும் நீரேற்றதுடன் இருக்கும். 

✅புதினா டீ

மதிய உணவிற்கு பின் ஒரு கப் புதினா டீ குடித்து பாருங்க உடலில் உள்ள சோம்பல் தலை தெறிக்க ஓடி விடும். புதினா டீயை பருகுவதால் புத்துணர்ச்சி கிடைப்பதோடு குடல் ஆரோக்கியம் மேம்படும்.  

✅வாழைப்பழம்

நண்பகல் அல்லது மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கும். இதில் பொட்டாசியம் மற்றும் இயற்கை சர்க்கரை நிறையவே காணப்படுகிறது. எனவே இதை சாப்பிடுவதன் மூலம் வேலையில் கவனம் செலுத்தலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.