நீரிழிவு முதல் வாய் துர்நாற்றம் வரை - வெற்றிலை தரும் எண்ணற்ற பயன்கள்!

பொதுவாகவே வெற்றிலையை சுண்ணாம்பு மற்றும் பாக்கு வைத்து பயன்படுத்துவது தான் வழக்கம்.

வெற்றிலை ஒரு இதய வடிவிலான வற்றாத கொடியாகும், இது இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பயிரடப்படுகிறது.

வெற்றிலைகள் மத நோக்கங்களுக்காகவும், மெல்லுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் வெற்றிலை சாப்பிடுவதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

📌வெற்றிலையில் உள்ள ஊட்டச்சத்துகள்

👉நீர் 85-90%

👉புரதம் 3-3.5%

👉கொழுப்பு 0.4-1%

👉கனிமங்கள் 2.3-3.3%

👉ஃபைபர் 2.3%

👉கார்போஹைட்ரேட் 0.5-6.1%

👉பொட்டாசியம் 1.1-4.6%

👉கல்சியம் 0.2-0.5%

👉வைட்டமின் C 0.005-0.01%

இன்றைய வாழ்க்கைய முறையில் பலருக்கும் யூரிக் அமிலம் நோய் ஏற்படுகிறது. பலர் வயது வித்தியாசமின்றி யூரிக் அமிலத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு அழுக்கு கூறு ஆகும். இது அதிகரிப்பதால் மூட்டுவலி மட்டுமின்றி சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது.

வெற்றிலை யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை சாப்பிடுவதால் இந்த ஆபத்தில் இருந்து வெளிவரலாம்.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, நோயாளிகள் தினமும் வெற்றிலையை மென்று சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்ட பின் சிறிதளவு வெற்றிலையை மென்று சாப்பிடுவது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய் தொற்று ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் வழங்கும். 

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வெற்றிலை குடலைப் பாதுகாக்க உதவும் மூலிகையாகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இதை மென்று சாப்பிடலாம்.  

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு வெற்றிலையை சாப்பிடலாம்.  

இது வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த குளுக்கோஸால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.