மாதவிடாய் வலியை போக்கும் உளுந்து லட்டு செய்வது எப்படி?

பொதுவாகவே உளுந்து வைத்து இட்லி, தோசை, வடை, களி தான் செய்வது வழக்கம். உளுந்து என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அதன் மருத்துவ குணங்கள் தான்.

ஆம். பெண்கள் பூப்படைந்தாலும் அதனால் தான் உளுந்து வைத்து களி செய்துக் கொடுக்கிறார்கள். 100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 18 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

எனவே உளுந்து வைத்து எப்படி சுவையான உளுந்து லட்டு செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

📌தேவையான பொருட்கள்

👉முழு உளுந்து - 1 கப்

👉அரிசி - 2 மேசைக்கரண்டி

👉நெய் - 1 மேசைக்கரண்டி

👉முந்திரி பருப்பு - கால் கப்

👉வெல்லம் - 3 மேசைக்கரண்டி

👉ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

👉நெய் - 2 மேசைக்கரண்டி  

✅செய்முறை

ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

அடுத்து முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெய் இன்றி வறுத்து நன்கு ஆறவிடவும்.

வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பின்பு இதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான உளுந்து லட்டு தயார்!

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.