தினமும் போதுமான தண்ணீர் பருகாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு தனிமனிதன், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  நீரின்றி அமையாது உடல். தினம்தோறும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு நாம் தெரிந்துக் கொள்வோம்.

✅உடல் சூடு குறையும்

உடல் சூட்டை சம நிலையில் வைத்திருக்க, தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிப்புறமாக இருந்து மட்டுமல்லாமல், உள்ளூர இருந்தும், உடல் சூட்டை தணிக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. எந்த வகையான காலநிலையாக இருந்தாலும் குறிப்பாக, வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம்.

✅ஊட்டசத்து கிடைக்கும்

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த முறையாக தண்ணீர் செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் சிறந்த விநியோகம் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவை போதுமான நீர்ச்சத்தினால் செயல்பட உதவுகின்றன.  

✅உடல் கழிவுகளை நீக்குதல்

குடல் இயக்கத்திற்கு நன்றாக உதவும் செயல்பாடுகளுள் ஒன்று, அதிகம் தண்ணீர் குடிப்பது. உடலில் உள்ள டாக்ஸின் கழிவுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் உள்ள நச்சுகள் மூலம் கழிவுப்பொருட்களாக வெளியேற்ற உதவும். இவற்றை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான தண்ணீரை குடிப்பது, சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான டாக்ஸின்ஸை உருவாக்காமல் தடுக்கிறது.

✅செரிமானத்திற்கு உதவும்

நாம் சாப்பிடும் உணவு, உணவு செரிமானப் பாதை வழியாக எளிதாக செல்ல நீர் எளிதாக்குகிறது. மேலும் உணவுகளின் மூலம் உருாகும் ஊட்டச்சத்துக்களை உடைத்து, உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இது, வழக்கமான குடல் இயக்கத்தை பராமரித்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது. 

✅அறிவாற்றலுக்கு உதவும்

மனத் தெளிவு மற்றும் சரியான அறிவாற்றல் செயல்பாடு போதுமான நீரேற்றத்தைப் பொறுத்து அமையும். நீர்ச்சத்தினை சரியாக உடலில் வைத்துக்கொள்வதால் நமது மன நிலையும், நினைவாற்றலும் கூட அதிகரிக்கும். இது, கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கும். 

✅இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கும்

தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இது, மயக்கம் வருதல், தலை சுற்றுதல் ஆகியவற்றையும் தடுக்கும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.