இந்த 3 காரணங்களால் தான் நீரிழிவு நோய் அதிகரிக்கின்றன.

சமீப காலமாக இந்தியாவில் சர்க்கரையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம். தெரிவித்துள்ளது.

மேலும், 25 மில்லியன் மக்கள் ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பதாகவும் கூறி எச்சரித்துள்ளது.

வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக இளம்வயதினர் கூட நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றன.

அந்தவகையில், நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான மூன்று கரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

👉1. சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை

மக்களிடம் நீழிரிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை தான்.

அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி பார்ப்பது, மொபைல் நோண்டுவது போன்ற காரணத்தால் உடல் இயக்கத்தில் ஈடுபட முடியவில்லை.

இந்தப் பழக்கம் நாளடைவில் மெடபாலிஸசத்தை பாதித்து உடல் பருமனுக்கு காரணமாகிறது. இதனால் டைப்-2 டயாபடீஸ் வருகின்றனர்.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று நேரம் நடந்து செல்லுங்கள்.

தினமும் காலையில் நடைபயிற்சி செல்லுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பழங்கள், நட்ஸ், சாலட் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

👉2. மன அழுத்தம்

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான இரண்டாவது முக்கிய காரணம் மன அழுத்தம்.

அதிகமான வேலை நேரம் மற்றும் பணி அழுத்தம் காரணமாக மன அழுத்தம் உடலில் கார்டிசால் என்ற ஹார்மோனை உடலில் தூண்டி டயாபடீஸ் வருவதற்கும் காரணமாக அமைகிறது.

இதை தவிர்க்க தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

👉3. சர்க்கரை உணவுகள்

இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படும் கார்போஹைடரேட் நிறைந்த வெள்ளை அரிசி மற்றும் மைதா மாவு டயாபடீஸ் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இதற்குப் பதிலாக ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், சிகப்பு அரிசி போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற உணவுகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும் பழங்கள், நட்ஸ், யோகர்ட் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.               

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.