எலும்புகளை வலுப்படுத்த உதவும் கால்சியம் சத்து நிறைந்த 5 உணவுகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவியாக அமையும்.

எலும்புகளின் வலுப்படுத்த கால்சியம் சத்து நிறைந்த 5 உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

✅கசகசா

எலும்புகளுக்கு கால்சியத்தை வழங்க உணவில் கசகசாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கசகசா இரும்பு, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாகும்.

சத்துக்கள் நிறைந்த கசகசாவை குறைந்த அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். 

✅பால் பொருட்கள்

கால்சியம் பெற, பால் அல்லது பால் கொண்டு தயாரிக்கப்படும் சீஸ் , பனீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உட்கொள்வதால் முதுமையில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.  

✅சியா விதைகள்

சியா விதைகள் கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும்.

ஒவ்வொரு 100 கிராம் சியா விதையில் சுமார் 400 - 600 மி.கி கால்சியத்தை வழங்குகிறது.

✅பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளை உட்கொள்வதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இவற்றில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

கீரை சாப்பிடுவதால் கால்சியம் மட்டுமல்லாது இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி ஆகியவையும் கிடைக்கும்.

✅நட்ஸ் விதைகள்

பாதாம், எள் மற்றும் ஆளி விதைகளை உண்பதால் கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் கே, பல்வேறு தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.