முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா? இது தான் சிறந்த தீர்வு..!

தோலில் கரும்புள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ஆனால் பொதுவாக நடுத்தர வயதில் தோன்றும் சரும பிரச்சினையாகும்.

இதை தடுப்பதற்காக சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி சருமத்தை வீணடித்துக்கொள்வார்கள்.

ஆனால் வீட்டு வைத்தியத்தை விரும்புபவராக இருந்தால், இந்த எளிய முறையை ஒரு நாளாவது பயன்படுத்தி பாருங்கள்.

✅சர்க்கரை மற்றும் எலுமிச்சை

ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு தேக்கரண்டி சர்க்கரையை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பின் இந்த கலவையை 1-2 நிமிடங்களுக்கு கரும்புள்ளிகள் மீது மெதுவாக தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். 

✅மஞ்சள் மற்றும் தயிர்

ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து இரண்டு ஸ்பூன் தயிருடன் கலக்கவும். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு தடவி விடவும். வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன், அந்த பகுதியை மெதுவாக தேய்த்து எடுத்து கழுவுவது நல்லது.  

✅ஓட்ஸ் மற்றும் தேன்

இரண்டு தேக்கரண்டி ஓட்ஸில் தேன் சேர்த்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும். கரும்புள்ளிகள் மீது ஸ்க்ரப்பை மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

✅பாதாம் மற்றும் பால்

ஒரு ஸ்பூன் பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து எடுக்கவும். பின் இந்த கலவையை கரும்புள்ளிகள் மீது மெதுவாக தேய்த்து 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.  

✅பப்பாளி மற்றும் தேன்

பழுத்த பப்பாளியை பிசைந்து இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதில் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இந்த கலவையை கரும்புள்ளிகளுக்கு மேல் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின் சாதாரண தண்ணீரில் கழுவவும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.