வந்த இடம் தெரியாமல் பொடுகை விரட்டியடிக்கும் வேம்பு, எலுமிச்சை.

உங்கள் கறுப்பு உடையில் தொடர்ந்து விழும் அந்த சிறு சிறு செதில்களால் உங்களுக்கு கூச்சமாக இருக்கிறதா? பொடுகு என்பது உச்சந்தலையை பாதிக்கும் ஒரு தோல் பிரச்சினையாகும்.

இது மருத்துவ ரீதியாக செபோரியா என்றும் அழைக்கப்படுகிறது. இதை எப்படி விரட்டலாம் என தெரியாமல் பலரும் குழம்பி இருப்பார்கள்.

இந்த பிரச்சினையானது தீவிரமாக இருந்தால் நீங்கள் கட்டாயம் வைத்தியரிடம் செல்வது சிறந்ததாகும்.

அதுவே முதற்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து விரட்டலாம்.

✅பயன்படுத்துவது எப்படி?

முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து உச்சந்தலையில் இருந்து நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். 

பின்னர் சீயக்காய் கொண்டு தலையை கழுவ வேண்டும்.  

அடுத்து வேப்ப எண்ணெயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவவும். இதை 20 நிமிடங்களுக்கு பின் கழுவினால் பொடுகு நீங்கி விடும்.

வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

இந்த முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை செய்யலாம். இதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.