உதட்டில் வெடிப்பு வருவதற்கு காரணம் இது தான்.

குளிர்காலத்தில் வறண்ட காற்றினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது சாதாரணம் விடயம் தான். ஆனால் சாதாரண சூழ்நிலையிலும் உதடுகள் வெடித்தால், அதை நீங்கள் சாதாரணமாக எடுத்தக்கொள்ளக் கூடாது.

வெடிப்பு உதடுகள் அழகு அல்ல, ஆனால் அது ஒரு உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், உதடு வெடிப்பு பிரச்சனையும் ஏற்படுவதாக பல மருத்துவர்களும் தெரிவிக்கின்றனனர்.

எனவே உடலில் எந்தெந்த சத்துக்கள் குறைவதால் உதட்டில் வெடிப்பு ஏற்படுகின்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உதடுகளின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்த ஒரு பகுதியாகும். இவ்வாறு இருக்கும் இந்த தோல் குளிர் காற்று மற்றும் சூரிய ஒளியால் பாதிக்கப்படும் போது, உடலிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

நீரிழப்பு காரணமாக உதடுகள் அடிக்கடி வெடிக்கும். இது தவிர, ஊட்டச்சத்து குறைபாடும் உதடுகளில் வெடிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. உதடுகளில் வெடிப்பை ஏற்படுத்தும் சத்துக்கள் பற்றி தற்போது பார்க்கலாம். 

வைட்டமின் பி குறைபாட்டால் முதலில் பாதிக்கப்படுவது உதடுகள். நீங்கள் சிரிக்கும்போது வாயின் இறுதியில் வெடிப்புகள் இருந்தால், அது வைட்டமின் பி குறைபாடாக இருக்கும்.  

குறிப்பாக வைட்டமின் பி-12 குறைபாடு உதடுகளில் வெடிப்பு மற்றும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

சைவ உணவு உண்பவர்களுக்கு பெரும்பாலும் பி-12 குறைபாடு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். ஏனெனில் வைட்டமின் பி-12 என்ற சத்தானது அசைவ உணவில் தான் அதிகமாக காணப்படுகிறது. எனவே நீங்கள் வைக உணவை உண்பவர் என்றால் Supplements போன்ற உணவுகளை முயற்சித்து பார்க்கலாம்.

✅வைட்டமின் சி

வைட்டமின் சி குறைபாடு காரணமாக, முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது யாரும் அறிந்த விடயமே. வைட்டமின் சி உதடுகளுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து ஆகும். எனவே தான்உதடுகள் வெடிக்கத் தொடங்குகின்றன. 

எனவே நீங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெரி மற்றும் கேப்சிகம் போன்ற சிட்ரஸ் பழங்களை தினசரி எடுத்துக்கொள்ளுங்கள்.

✅இரும்பு

இரும்புச்சத்து குறைபாட்டால் உதடு வெடிப்பு பிரச்சனையும் ஏற்படுகிறது. வெடிப்பு உதடுகள் இரத்த சோகையின் அறிகுறியாகவும் இருக்கிறது. 

பொதுவாக பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதால் உதடு வெடிப்பு ஏற்படும். வைட்டமின் பி12 போன்று சைவ உணவு உண்பவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுகிறது.

எனவே இரும்புச்சத்து கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் காணப்படுகிறது. எனவே இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதாகும்.  

✅ஜிங்க்

உதடுகளை ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் மிக முக்கியமான சத்துகளில் ஜிங்க் அடங்கும்.

இறைச்சி மற்றும் மீனுடன், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களில் ஜிங்க் காணப்படுகிறது. எனவே இதை எடுத்துக்கொள்வதும் நல்லதாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.