முகப்பருவை மறைய செய்யும் வேப்பிலை Soap - வீட்டில் செய்வது எப்படி?

உடலை சுத்தம் செய்துக் கொள்வதற்கு பலரும் வாசணை மிக்க சவர்க்காரத்தை பயன்படுத்துவது வழக்கம்.

இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பல்வேறு வகையான சவர்க்காரங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சில சமயத்தில், சில பொருட்கள் மூலிகை இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாக கூறி சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதை நம்பி மக்களும் வாங்கிக் கொள்கிறார்கள்.

இவை அனைத்தும் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க பயன்படுத்தப்படும் தந்திரங்களாகும்.

சாதாரண சவர்க்காரத்தை காட்டிலும் இயற்கையாக தயாரிக்கப்படும் சவர்க்காரமானது விலையில் அதிகமாக இருக்கும்.

எனவே இதை எப்படி நீங்கள் வீட்டிலேயே குறைந்த விலையில் செய்யலாம் என பார்க்கலாம்.

✅Soap செய்வது எப்படி?

80 முதல் 100 வேப்ப இலைகளை எடுத்து நன்கு கழுவவும். 

பின் இதை அரைத்து அதில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து எடுத்துக்கொள்ளவும்.

கிளிசரின் மற்றும் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட transparent soap ஐ துருவி எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதன் மேல் வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் துருவிய soap சேர்த்து உருக்க வேண்டும்.  

உருகிய பிறகு, அரைத்த வேப்பிலையை சேர்த்த 5 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் 2 வைட்டமின் E மாத்திரைகளை கலக்கவும்.

பின் இதை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.  

இந்த சவர்க்காரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மையை தருவதோடு சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.