வெயிலில் முகம் கருத்துப்போகாமல் இருக்க இந்த ஒரு பொருள் போதும்.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள்.

இயற்கை முறையில் ரோஸ் வாட்டர் கொண்டு தயாரிக்கப்படும் பேக்கை பயன்படுத்தி வர உடல் மற்றும் முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.

📌1. முல்தானி மிட்டி+ ரோஸ் வாட்டர்

✅தேவையான பொருட்கள்

👉முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்

👉ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

📌2. காபி பவுடர்+ ரோஸ் வாட்டர்

✅தேவையான பொருட்கள்

👉காபித் தூள் - 2 ஸ்பூன்

👉ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில் 2 ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

📌3. சந்தன பவுடர்+ ரோஸ் வாட்டர்

✅தேவையான பொருட்கள்

👉சந்தன பவுடர்- 2 ஸ்பூன்

👉ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

📌4. கடலை மாவு+ ரோஸ் வாட்டர்

✅தேவையான பொருட்கள்

👉கடலை மாவு - 2 ஸ்பூன்

👉ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பவுலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

📌5. கற்றாழை+ ரோஸ் வாட்டர்

✅தேவையான பொருட்கள்

👉கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்

👉ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பவுலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.