சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த ஒரு டீ போதும்

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.

அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த ஒரு டீ போதும், இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

✅தேவையான பொருட்கள்

👉தண்ணீர் - ஒரு கப்

👉கிரீன் டீ பவுடர் - ஒரு ஸ்பூன்

👉பட்டை - ஒரு துண்டு

👉பிரியாணி இலை - 3

👉தேன் - தேவையான அளவு

✅செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின் கொதிக்க வைத்த தண்ணீரில் பட்டை, பிரியாணி இலை, கிரீன் டீ பவுடர் ஆகிய பொருட்களை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

15 நிமிடங்களுக்கு பிறகு இந்த டீயில் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளைக் குறைத்து, செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு 3 வேளைகள் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடலின் இடுப்பளவும், கெட்ட கொழுப்புகளும் குறைந்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

குறிப்பாக, கர்ப்பமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பெருங்குடல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்க வேண்டும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.