புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்- அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

புகை, மது உள்ளிட்டவைதான் புற்றுக்கு வழிவகுக்கும் என்பது மாறி, மரபு ரீதியிலான காரணங்கள், வாழ்க்கைச்சூழல், உணவூட்டம் ஆகியவையும் கூட புற்றுநோய்க்கு வித்திடுகின்றன.

அன்றாடம் பணி நிமித்தம், போதிய உடல் உழைப்பின்றி அதிக நேரம் அமர்ந்திருப்பது கூட கேன்சர் பாதிப்புக்கு வாய்ப்பாகும் என்கிறது மருத்துவ ஆய்வு.

புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டுகொண்டால் சிகிச்சை நடைமுறைகளும், விரைந்து குணம்பெறுவதும் எளிதாகும்.

✅ஆரம்ப அறிகுறிகள்

பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் வெகுவாய் குறைவது புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

மேலும், உணவருந்த ஆரம்பித்ததுமே வயிறு நிரம்பியதாக உணர்வது ஆகியவை புற்றுநோயின் பரவலான அறிகுறிகளாகும். 

மலத்தில் தென்படும் ரத்தம், கருமை நிற திட்டுக்கள் தென்படுவது அல்லது மலம் முழுமைக்குமே கருப்பாக அமைவது ஆகியவை இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயை, தோலில் ஏற்படும் மாற்றங்கள், சிறிய கட்டிகள், மார்பகத்தின் வடிவத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் மூலமே கண்டுகொள்ளலாம்.

கருப்பை புற்றுநோயானது வயிற்றுப்போக்கு, இரைப்பை அழற்சி, சற்று சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிய உணர்வு, வயிறு பெருப்பது போன்ற இரைப்பை மற்றும் குடல் பாதிப்புக்கான அறிகுறிகளை காட்டும்.  

குறிப்பாக எடை இழப்பு உண்மையில் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும்.

உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேலாக அவருடைய முயற்சியின்றி இழப்பு ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.

பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும்.

முன்னோர்களில் எவருக்கேனும் புற்றுநோய் இருந்திருப்பின், ஆரம்ப அறிகுறிகளின்போதே விரைந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.