பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து அதை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாகவே பச்சை மிளகாய் அனைவரது வீட்டின் சமையலறையிலும் காணப்படும் பொருளாகும்.

உணவின் சுவையை அதிகரிக்கவோ அல்லது சாலட் செய்து சாப்பிடவோ இது உதவுகிறது.

உணவுக்கு காரமான சுவையை சேர்க்கும் பச்சை மிளகாய், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை பச்சை மிளகாயில் உள்ளன.

பச்சை மிளகாயை சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நன்மையை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதை தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு அந்த தண்ணீரை குடித்தால் அது உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற இலைகள் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

பச்சை மிளகாயை ஒரு வாரம் ஊறவைத்து அதன் தண்ணீரைக் குடித்தால் உங்களது உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

✅கிடைக்கும் நன்மைகள்

பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலை பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. 

இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பச்சை மிளகாய் நீர் தோல் மற்றும் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

பச்சை மிளகாய் நீர் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

இதில் அதிக உணவு நார்ச்சத்து உள்ளது. இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

✅பச்சை மிளகாய் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

👉இரவில் தூங்கும் முன் 3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவவும். 

👉பின் மிளகாயின் நடுவில் வெட்டிக் கொள்ளவும்.

👉இந்த மிளகாயை குறைந்தது 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.

👉இந்த தண்ணீரை தினமும் நீங்கள் காலையில் குடிக்க வேண்டும். 

இதை குடிப்பதற்கு முன் சிறிது நேரம் நீங்கள் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.