சமைக்கும் முன் சிக்கனை கழுவக்கூடாதாம்: உங்களுக்குத் தெரியுமா?

சமைக்கும் முன் சிக்கனைக் கழுவக்கூடாது என்கிறது பிரித்தானிய பத்திரிகை ஒன்று. சொல்லப்போனால், ,பிரித்தானியர்கள் கடைப்பிடிக்கும் தவறான சமையல் நடைமுறைகள், என்னும் ஆய்வுக் கட்டுரையில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியர்களில் (ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில்) மூன்றில் ஒருவர் சிக்கனை கழுவுகிறார் என்கிறது அந்தக் கட்டுரை.

அவுஸ்திரேலியர்களில் பாதிபேரும், நெதர்லாந்து நாட்டவர்களில் 25 சதவிகிதம்பேரும் சமைக்கும் முன் சிக்கனைக் கழுவுகிறார்கள் என்கிறது வேறொரு செய்தி.

✅காரணம் என்ன?

அதாவது, சிக்கன் அல்லது கோழிக்கறியில் சால்மோனெல்லா மற்றும் கேம்பைலோபாக்டர் என்னும் நோய்க்கிருமிகள் காணப்படும்.

அவுஸ்திரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளில், இந்த இரண்டு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம். ஆண்டொன்றிற்கு கேம்பைலோபாக்டர் என்னும் கிருமித் தொற்றுக்கு ஆளாகும் 220,000 பேரில், 50,000 பேர் சிக்கன் காரணமாகவே பாதிப்புக்குள்ளாகியுள்ளார்களாம்.

✅அப்படியானால் சிக்கனைக் கழுவக்கூடாதா?

அதாவது, சிக்கன் அல்லது சமைக்காத கோழிக்கறியில் சால்மோனெல்லா மற்றும் கேம்பைலோபாக்டர் என்னும் நோய்க்கிருமிகள் காணப்படுவதால், கோழிக்கறியை தண்ணீர்க் குழாயில் கழுவும்போது தெறிக்கும் தண்ணீர் மூலம் இந்தக் கிருமிகள் பரவும்.

அந்த தண்ணீர் மூலம், கோழிக்கறியைக் கழுவுபவர்கள், அந்த நோய்க்கிருமி உள்ள தண்ணீர் பட்ட பாத்திரத்தில் சாப்பிடுபவர்கள், தண்ணீர் குடிப்பவர்களுக்கு அந்த கிருமிகள் நோய்த்தொற்றை உருவாக்கும்.

ஆகவேதான், கோழிக்கறியைக் கழுவக்கூடாது என்கிறார்கள் சில மேலை நாட்டவர்கள்.

✅சிக்கனை கழுவியே ஆகவேண்டும் என்றால் என்ன செய்வது?

இதெல்லாம் மேலை நாட்டவர்களுக்கு சரி. நாம் எப்படி கோழிக்கறியை கழுவாமல் சமைப்பது என்று கேட்பவர்களுக்கு ஒரு வழி உள்ளது.

கோழியைக் கழுவும்போது தண்ணீர் தெறிப்பதால் நோய்க்கிருமிகள் பரவும் என்பதால், அதை தண்ணீர்க் குழாயில் கழுவாமல், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து, கோழிக்கறியை அதற்குள் மூழ்கவைத்துக் கழுவலாம்.

கோழிக்கறியைக் கழுவியபின், அந்த பாத்திரங்களை உகந்த சோப் மூலம் கழுவி வெயிலில் வைக்கலாம். கோழிக்கறியை கழுவியவர்கள் தகுந்த சோப் மூலம் கைகளை கழுவிக்கொள்ளலாம்.

✅அப்படியானால் நோய்க்கிருமிகளைக் கொல்லமுடியாதா?

கோழிக்கறி சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். நம்மில் சிலரும் கோழிக்கறி சாப்பிட்டபின்போ, அல்லது இரண்டாவது நாள் கோழிக்கறியை சுடவைத்து சாப்பிட்டபின்போ, வயிற்று உபாதைகள் மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

விடயம் என்னவென்றால், கோழிக்கறியிலிருக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்ல ஒரே வழி அதை சரியான வெப்பநிலையில் சமைப்பதுதான்.

ஆக, சரியான வெப்பநிலையில் வேகவைக்கப்படாத, அல்லது சரியாக வேகவைக்கப்படாத கோழிக்கறியில் இந்த நோய்க்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கவும், அவை நோயை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.