ஒரே மாதத்தில் உடல் எடையை குறைய வேண்டுமா! இந்த ஒரு எண்ணெய் போதும்...

உடல் எடை அதிகரிப்பது என்பது தற்போது இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய பிரச்சினையாக உள்ளது. ஆண், பெண் என அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பதற்கு தற்போதைய வாழ்க்கை நிலை, உணவு பழக்கவழக்கம், ஹார்மோன்களின் செயற்பாடு, உடற்பயிற்சி செய்யாமை, தூக்க நேரம்,என பல காரணங்கள் உண்டு.

தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே வேலை வேலை என்று இயந்திர வாழ்வை வாழ்கின்றோம். இதில் உடற்பயிற்சி செய்வதற்கு என தனியான நேரம் ஒதுக்குவது என்பது அனைவராலும் முடியாது.

✅உடல்  எடை அதிகம்

உடல் எடையை குறைக்க விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம்.ஆனால் அதை முறையாக பின்பற்ற முடியாமல் பாதியில் கைவிட்டு விடுவோம்.

அந்தவகையில், ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க ஆலிவ் எண்ணெய் ஒன்று போதும். ஆலிவ் எண்ணெயில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கும் பல பண்புகள் உள்ளன.

தினமும் உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துபவர்களால் உடல் எடையை குறைக்க முடியும் என்று ஆய்வுகளில் வெளியாகியுள்ளது.

✅அதிகமான கலோரிகள்

ஆலிவ் எண்ணெயில் உள்ள அதிகமான கலோரிகள் வயிற்றை நிரம்பிய உணர்வை அளிக்கிறது.

இதன் காரணமாக தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.

மேலும் இந்த எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதால் துரித உணவுகள், இனிப்புகள், எண்ணெய் உணவுகளை உண்ணும் ஏக்கம் குறைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

எனினும், ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இல்லை. எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

✅ஆலிவ் எண்ணெய்

இதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகமாக உள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆலிவ் எண்ணெய் உட்கொள்பவர்களுக்கு அல்சைமர் நோய் குறைவாக வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆலிவ் எண்ணெய் இதய பாதுகாப்பிற்கு நல்லது. மேலும், ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை சீராக்குகின்றது. எனவே, இதற்கமைய ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவுகின்றது எனலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.