மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சட்டென உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

கோடை காலத்தில் பொதுவாகவே அனைவரும் பழங்களை சாப்பிட விரும்புவது வழக்கம். அதிலும் சந்தையில் விலை குறைவுடன் பழங்கள் விற்கப்படும்.

முலாம்பழம், தர்பூசணி, வெள்ளரி, மாம்பழம் உட்பட கோடையில் கிடைக்கும் இவை அனைத்தும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தவை.

குறிப்பாக பழங்களின் ராஜாவான 'மாம்பழம்' அனைவருக்கும் பிடித்தமான பழமாகும். மாம்பழ பானம் அல்லது மாம்பழத்தை பழமாக சாப்பிடுவது போன்று எதுவாக இருந்தாலும், கோடையில் அனைவரும் மாம்பழத்தை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்த சுவையான பழம் பல வழிகளில் உணவில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட முறையில் சாப்பிட்டால் உடல் எடையையும் குறைக்கலாம்.

ஆம், மாம்பழமானது சுவை மற்றும் ஆரோக்கியத்தின் தனித்துவமான கலவையாகும், இது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.  

நீங்கள் எளிதாக எடையைக் குறைக்க முடிவு செய்த்துள்ளீர்கள் என்றால் இந்த முறையை கடைப்பிடிக்கவும்.

உடல் எடையை குறைக்கும் மாம்பழம்

தேங்காய் தண்ணீர், மாம்பழம் மற்றும் சியா விதைகளின் கலவையானது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் எடையைக் குறைப்பதற்கும் சிறந்தது.

மாம்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து செரிமானமும் மேம்படும்.

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

மாம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது.

இது எடையைக் குறைப்பதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவு நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் சியா விதைகளில் காணப்படுகின்றன. இவை உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

இதை வைத்து எப்படி சுவையான மற்றும் உடல் எடையை குறைக்கும் மாம்பழ ஸ்மூத்தி செய்யலாம் என பார்க்கலாம்.  

✅மாம்பழ ஸ்மூத்தி தயாரிப்பது எப்படி?

📌தேவையான பொருட்கள்

👉தேங்காய் தண்ணீர் - 1

👉மாம்பழம் - 1

👉ஐஸ் கட்டி - 2

👉சியா விதைகள் - 1 தேக்கரண்டி 

✅செய்முறை

முதலில் அனைத்தையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.

அதில் இறுதியாக சியா விதைகளை கலந்து குடித்தால் நல்லது.

மாம்பழத்தை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சுவை, ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதுடன் உடல் எடையும் குறையும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.