பால் டீ அதிகமாக குடிச்சா இந்த ஆபத்து எல்லாம் வரும் தெரியுமா?

டீ குடிப்பது என்பது சிலருக்கு உற்சாக பானம். சிலருக்கோ டீ என்பது ஒருவகை எமோஷன் என்று சொல்வார்கள் ஆனால் பால் சேர்த்த டீ குடிப்பதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்று கண்டறியப்படடுள்ளது. அவ்வாறு என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது என நாம் இங்கு பார்ப்போம்.

✅மலச்சிக்கல்

டீ திரவ உணவு தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிகமாக பால் சேர்த்த டீ குடிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். இதனால் உடல் வறட்சி அடைந்து மலக்கட்டு பிரச்சினைகள் ஏற்படும். உடல் கழிவுகள் முறையாக வெளியேறாமல் மலச்சிக்கலால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

✅மன அழுத்தம்

உடலும் மனமும் சோர்வாக இருக்கும்போது டீ குடித்தால் சரியாகிவிடும் என்று நினைப்போம். ஆனால் டீ அதிகமாகக் குடிக்கும் போது உடலில் பதட்டம் அதிகரிக்கும். ஏற்கனவே மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாக டீ குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

✅தூக்கமின்மை

பால் சேர்த்த டீ அதிகமாக குடிப்பவர்களுக்கு தூக்க சுழற்சி முறை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகோ, தூங்கச் செல்வதற்கு சிறிது நேரம் முன்போ டீ குடிக்கும் போது இந்த பிரச்சினை அதிகமாகும். டீயில் உள்ள காஃபைன் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சினைக்குக் காரணமாக அமைகிறது.

✅ரத்த அழுத்தம்

அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கும் அதிகமாக டீ குடிக்கிறவர்களுக்கும் ரத்த அழுத்தம் சீராக இருப்பதில்லை. திடீரென உயர்வது, திடீரென குறைவது என மாறி மாறி இருக்கும். ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அதிகமாக டீ குடிக்கும் நபராக இருந்தால் கட்டாயம் குறைத்துக் கொள்ளுங்கள்.

✅​நீர்ச்சத்து குறைபாடு

பால் சேர்த்த டீ குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். தேயிலையில் உள்ள அதிகப்படியான காஃபைன் உடலில் உள்ள டீஹைட்ரேஷனை ஏற்படுத்தும். அதிலும் அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை கட்டாயம் இருக்கும்.

✅தலைவலி அதிகரிக்கும்

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தான் நமக்கு தலைவலியே உண்டாகிறது. அந்த நேரத்தில் டீ குடிப்பதால் தலைவலி இன்னும் அதிகரிக்கும்.

✅​வயிற்றில் தொப்பை

சில உணவுகளை சாப்பிட்டதும் எப்படி வயிறு உப்பசம் உண்டாகிறதோ அதேபோல அதிகமாக டீ குடிக்கும்போதும் உண்டாகும். குறிப்பாக டீயில் பால் சேர்க்கும்போது அது அசிடிட்டியை ஏற்படுத்தும். இது வயிறு அசௌகரியம் மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தக் கூடும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.