தொப்பையை குறைக்க உதவும் கோடை பழங்கள்!

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.

கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.  அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பல பழங்கள் நமக்கு கிடைக்கின்றன. அந்த வகையில், தொப்பையை குறைக்க உதவும் கோடை கால பழங்கள் பற்றி பார்க்கலாம்.

✅ஆப்பிள்

ஆப்பிள்கள் எடையை குறைப்பதற்கு சிறந்த பழமாகும்.   இதில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளது.

✅அவகோடா

அவகோடா பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது.  இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

✅பப்பாளி

பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துகிறது.  இது எடை இழப்புக்கு உதவுகிறது.

✅கொய்யா பழம்

கொய்யாவில் அத்தியாவசிய வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.  இது எடை இழப்புக்கான உதவுகிறது.

✅கிவி

கிவி பழத்தை செரிமானம் செய்ய நமது உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது.  இது கொழுப்பை கறைக்க உதவுகிறது.

✅பெர்ரி

பெர்ரி அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கிறது.  இதனால் அளவுக்கு அதிகமாக உண்பது தடுக்கப் படுகிறது.

✅பேரிக்காய்

பேரிக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.  இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டையும் வழங்குகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.