கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சி கோட்பாடு அடிப்படையில் வகுப்பறையில் பயன்பாடுகள்

கோல்பர்க் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உளவியலாளர் ஆவார். அவர் 1969 ஆம் ஆண்டில் தனது "ஒழுக்க வளர்ச்சியின் தத்துவார்த்த கட்டமைப்பு" என்ற கட்டுரையில் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியை ஆறு கட்டங்களாகப் பிரித்தார். 

இந்தக் கட்டங்கள் குழந்தைகளின் ஒழுக்க நெறிமுறைகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. கோல்பர்க் ஒழுக்க வளர்ச்சியை 'நெறிமுறை தீர்ப்பு" மற்றும் 'நெறிமுறை நடத்தை" ஆகிய இரண்டு கூறுகளின் அடிப்படையில் ஆராய்ந்தார். நெறிமுறை தீர்ப்பு என்பது ஒரு செயல் நல்லது அல்லது கெட்டது என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. 

நெறிமுறை நடத்தை என்பது ஒரு நபர் நெறிமுறை தீர்ப்பின் அடிப்படையில் கோல்பர்க் தனது ஆய்வில் குழந்தைகளுக்கு ஒழுக்கக் கதைகளைச் சொன்னார் அல்லது ஒழுக்கக் கேள்விகளைக் கேட்டார்.

 குழந்தைகளின் பதில்களைப் பகுப்பாய்வு செய்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளனர் என்பதை தீர்மானித்தார் கோல்பர்க் (Kohlberg's) ஒழுக்க அறிவின் மூன்று நிலைகளை கண்டறிந்துள்ளார். (Pre-conventional morality) 04 நிலையிலான நல்லொழுக்க நிலை (Conventional morality) மரபுக்கு பிற்பட்ட நல்லொழுக்க நிலை (Post-conventional morality)) ஆகியவைகளாகும். ஒவ்வொரு நிகழ்வும் சிக்கலான ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக் (Complex stages of moral development) கொண்டது.

தார்மீக வளர்ச்சியின் நிலைகள்.

 கோல்பெர்க்கின் கோட்பாடு மூன்று முதன்மை நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தார்மீக வளர்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திலும். இரண்டு நிலைகள் உள்ளன. எல்லா மக்களும் அறிவாற்றல் வளர்ச்சியின் மிக உயர்ந்த நிலைகளை அடைவதில்லை என்று பியாஜெட் நம்புவதைப் போலவே கோல்பெர்க் அனைவரும் தார்மீக வளர்ச்சியின் மிக உயர்ந்த நிலைகளுக்கு முன்னேற மாட்டார்கள் என்று நம்பினார்.

 ஒழுக்க அறிவின் மூன்று நிலைகளை கண்டறிந்துள்ளார். மரபு முற்பட்ட நல்லொழுக்க நிலை (Pre-conventional morality),மரபு முற்பட்ட நிலையிலான நல்லொழுக்க நிலை (Conventional morality)>மரபுக்கு பிற்பட்ட நல்லொழுக்க நிலை Post-conventional morality) ஆகியவைகளாகும். 

ஒவ்வொரு நிகழ்வும் சிக்கலான ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக் (Complex stages of moral development) கொண்டது.மரபு நிலைக்கு முற்பட்ட நிலை. மரபுக்கு முற்பட்ட நிலையில் (9 வயது. அதற்கு குறைவான. சற்று அதிகமான) நமக்கு ஒரு தனிப்பட்ட ஒழுக்க வழிகாட்டுதல்கள் ((Personal code of morality) இல்லை. அதற்கு பதில் நம் நன்னடத்தை வயது வந்தோரின் நடத்தைகளின் அடிப்படையிலும் விதிகளின் பின்விளைவுகளாலும் அல்லது அதன் விதிகளை மீறுவதாலும் (Breaking their rules)) வடிவமைக்கப்படுகிறது. 

அதிகாரம் தனிநபருக்கு வெளியே உள்ளது அவர்களின் நியாயவாதம் செயல்களின் விளைவுகளின் அடிப்படையில் அமைகிறது.

படிநிலை 1. 

கீழ்படிதல்> தண்டணை அடிப்படையில் (Obedience and Punishment orientation): தண்டணையைத் தவிர்க்க குழந்தை நன்னடத்தையை கடைப்பிடிக்கிறது. 

படிநிலை 2. 

தனித்தன்மை> பரிமாற்றம் (Individualism and Exchange) இந்நிலையில், குழந்தைகள்> அதிகாரத்தில் உள்ளோர் காட்டும் ஒரே ஒரு சரியான நோக்குதான் உள்ளது என்பதை ஏற்பதில்லை. வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு நோக்குகள்

நிலை 2 - மரபு நிலையிலான நல்லொழுக்க நிலை. இந்நிலையில் (அநேக இளைஞர்கள்> வயது வந்தோர்) வயதில் மரியாதைக்குரிய மூத்தவர்களின் ஒழுக்க நடைமுறைகளை மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். மேலாண்மை மனதில் பதிந்து அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் தன் குழு மதிக்கும் நடத்தை முறைகளின் அடிப்படையில் சிந்திக்கிறார்கள். 

படிநிலை 3. 

ஒருவருக்கொருவர் நல்ல தொடர்பு (Good interpersonal relationships) மற்றவர்கள் தன்னை நல்லவராக நினைக்கவேண்டும் என்பதற்காக குழந்தை நன்றாக நடந்து கொள்கிறது. எனவே மற்றவர்களின் சம்மதம் நடத்தையை வழி நடத்துகிறது. 

படிநிலை 4. 

சமூக அமைப்பை பாதுகாத்தல் (Good interpersonal relationships) குழந்தை சமுதாயத்திலுள்ள விரிவான விதிகளைப் பற்றி அறிந்து, விதிகளைக் கடைப்பிடித்து. நிலை 3 -மரபுக்கு பிற்படுத்தப்பட்ட நிலை தனி நபரின் முடிவு (Individual judgement) தானே தேர்வு செய்த கருத்துக்களின் அடிப்படையில் (Self-chosen principles) அமைந்துள்ளன. 

கோல்பெர்க்கின் கருத்துப்படி இத்தகைய தார்மீக சித்தனைமுறை (Moral reasoning) மக்களால் முடிந்தவரை பின்பற்றப்படும். 10 அல்லது 15 ம் பேர் மட்டும் படிநிலை 5 படிநிலை 6 க்கு தேவையான கருத்து பூர்வ சிந்தனை திறனை (Abstract thinking பெற்றுள்ளனர். அதாவது அநேக மக்கள் தங்கள் தார்மீக கருத்துக்களை சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கின்றனர். 

ஒரு சிலர் தார்மீக பிரச்சிiகைளைப் பற்றி தாமதமாக சிந்திக்கின்றனர். படிநிலை 5. சமூக ஒப்பந்தமும் தனிநபர் உரிமைகளும் Social contract and Individual rights) சட்டங்கள் பொதுவாக அநேக மக்களின் நன்மைக்காக இருந்தபோதிலும் சில நேரங்களில் அவை தனி நபரின் நன்மைக்கு எதிராக செயல்படுகின்றன என்பதை குழந்தைகள் உணர்கின்றார்கள். 

படிநிலை 6 (Universal principles) இந்நிலையில் உள்ளவர் தாமே தார்மீக வழிமுறைகளை (Moral guidance) ஏற்படுத்திக் கொள்வர். இவை சட்டத்தை பின்பற்றியோ எதிராகவோ இருக்கலாம். இந்த கொள்கைகள் எல்லோருக்கும் பொருந்தும். உதாரணம் மனித உரிமைகள் (Human rights) (Justice). சமத்துவம் ஆகியவை. அந்த நபர் கருத்துக்களின்படி நடக்க தயாராக இருப்பார். அது மீதமுள்ள மக்களுக்கு எதிராக இருந்தாலும் சரி கொள்கையை ஏற்காமல் சிறைக்கு செல்ல வேண்டியிருதல்

தார்மீக கோட்பாட்டை வகுப்பறையில் பயன்பாடுகள். குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டவுடன் அவர்களின் ஒழுக்க வளர்ச்சியை உருவாக்க ஆசிரியர் அல்லது பள்ளிக்கு பெரும் பங்கு உண்டு. குழந்தைகளின் தார்மீக வளர்ச்சிக்கான செயல்பாடு சார்ந்த திட்டத்தை வகுப்பறைக்குள் கொண்டு வருதல்.மாணவர்களின் நன்னெறி வளர்ச்சியில் வகுப்பறையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

பல்வேறு பாடத்திட்ட மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளை அமைப்பதன; மூலம், ஆசிரியர் மாணவர்களிடையே பல்வேறு தார்மீக பண்புகளை வளர்க்க முடியும். 

மொழிகள் மற்றும் சமூக ஆய்வுகள் போன்ற பல்வேறு பாடங்களை கற்பிப்பதில் ஆசிரியர் அன்பு> தியாகம்> சுயக்கட்டுப்பாடு, உண்மைத்தன்மை நேர்மை போன்ற தார்மீக பண்புகளை வலியுறுத்தலாம் இதன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் பெறும்.

யோகராஜ் சனோஜன்

2ம் வருட சிறப்பு கற்கை மாணவன்

கல்வி பிள்ளை நலத்துறை

கலைகலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

1 comment:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.