வெப்ப காலத்தில் இனிப்பு பானங்கள் அருந்துவதால் ஆபத்து

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை அருந்துவதால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே(haritha aluthge)தெரிவித்துள்ளார்.

செயற்கை இனிப்பு பானங்கள்

 இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும்.செயற்கை இனிப்பு பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம்.

வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம்.கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம்.

தற்போதைய சூழ்நிலையில், இயற்கை திரவங்களை அதிகம் குடிப்பது மிகவும் அவசியம். முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள், ஆரஞ்சு நீர், இளநீர் மற்றும் இயற்கை பானங்கள் அருந்துவது மிகவும் அவசியம்.

நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது மிகவும் அவசியம் எனவும், ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.