முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

வேப்பிலை உங்கள் சருமத்திற்கு எப்போதும் சிறந்த தேர்வாக இருக்கும். வேப்பம்பூ பேஸ்ட்டை முகத்தில் தடவினால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளுக்கு பிரபலமானது.

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் முகத்தில் எந்தவொரு தழும்பும் பருக்களும் இல்லாமல் இருப்பதே பிடிக்கும்.

ஆனால் ஒரு சிலருக்கும் பருக்கள் ஏற்பட்டு முகத்தில் பொலிவு இல்லாமல் இருக்கும். அதற்காக சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் கிடைக்கக் கூடிய வேப்பிலையை வைத்து எப்படி முகத்தை பொலிவாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

✅சந்தனம் + வேப்பம்பூ

✅தேவையான பொருட்கள்

👉வேப்பம்பூ பொடி

👉சந்தன பொடி

📌செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூ பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடியை எடுக்கவும். 

இவை இரண்டிலும் ரோஸ் வாட்டர் அல்லது வெற்று நீரில் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு உலர வைக்கவும்.

அடுத்து முகத்தை கழுவவும் இதை செய்து வருவதன் மூலம் முகத்தில் பருக்கள் ஏற்படாது.

✅உளுத்தம் பருப்பு மா + வேப்பம்பூ

✅தேவையான பொருட்கள்

👉வேப்பம்பூ தூள்

👉உளுந்து மா

👉பால்  

📌செய்முறை

ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் உளுந்து மாவுடன் சிறிது பால் சேர்க்கவும்.

இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு பின்ன வெற்று நீரில் கழுவவும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.