மீன் எண்ணெய் மாத்திரையால் ஏற்படும் ஆபத்து - சிலருக்கு மட்டும்

ஒரு காலத்தில், சில நாடுகளில், பிள்ளைகளுடைய நலனுக்காக, பெரும்பாலான பெற்றோர் மீன் எண்ணெய் மாத்திரை வாங்கிக்கொடுப்பது சர்வசாதாரணமான விடயமாக இருந்துள்ளது.

ஆனால், தற்போது, மீன் எண்ணெய் மாத்திரை என்பது எல்லோருக்கும் நன்மை பயக்கும் விடயம் அல்ல, சிலருக்கு அது ஆபத்தையும் ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

✅மீன் எண்ணெய் மாத்திரையால் ஏற்படும் ஆபத்து

மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு, இதயப் பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தலை வலி வந்ததும் உடனடியாக மருந்துக்கடைக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதுபோல, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் வாங்கி சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

✅ஆய்வில் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

உலக நாடுகள் சிலவற்றில், 400,000 தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியமான ஒரு கூட்டம் மக்கள், ஏற்கனவே இதய பிரச்சினை உள்ள ஒரு கூட்டம் மக்கள் என இரு பிரிவினருக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளைக் கொடுத்து அவர்களை கண்காணித்துவந்தார்கள் ஆய்வாளர்கள்.

ஆய்வு முடிவில், ஆரோக்கியமாக இருந்தவர்கள், அதாவது, முன்னர் இதயப் பிரச்சினை ஏதும் இல்லாமலிருந்தவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை குறிப்பிட்ட காலத்துக்கு எடுத்துக்கொண்டபின், அவர்களுக்கு இதயப் பிரச்சினை ஏற்படும் அபாயம் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதையும், பக்கவாதம் ஏற்படும் அபாயம் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதையும் கண்டறிந்தார்கள்.

அதே நேரத்தில், ஏற்கனவே இதயப் பிரச்சினைகள் இருந்தவர்களுக்கு, மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுத்துக்கொண்டபின், மாரடைப்பு வரையிலான இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 15 சதவிகிதம் குறைந்திருப்பதையும், இதய செயலிழப்பு முதல் மரணம் வரையிலான அபாயம் 9 சதவிகிதம் வரை குறைந்திருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

ஆக, இஷ்டம் போல நாமாகவே, மீன் எண்ணெய் மாத்திரை மட்டுமல்ல, எந்த மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆபத்து என்பதையே இந்த ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன எனலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.