வாரம் ஒரு முறை கோழியின் ஈரலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

உலகளவில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு இறைச்சி என்றால் அது கோழி தான். 

நம்மில் பலர் கோழியை சமைக்கும் போது அதன் ஈரலை சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் சிக்கன் ஈரல் ஆரோக்கியமானதல்ல என்ற  கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையில் மட்டன் ஈரலைப் போன்றே கோழி ஈரலும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது.

கோழி ஈரலை சாப்பிடும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. கோழி ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி நாம் இங்கு பார்போம்.

✅இரும்புச்சத்து

கோழி ஈரலில் தான் அதிகம் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கோழி ஈரலை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பெண்கள்கோழி ஈரலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கோழி ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது. 

✅கலோரிகள் குறைவு

தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளனர். இதனால் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். கோழி ஈரலில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு கோழி ஈரல் மிகச்சிறந்த உணவு. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு சட்டென்று நிரம்புவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். 

✅புரோட்டீன் அதிகம்

கோழி ஈரலில் கலோரிகள் மூலம் 73 சதவீதம் புரோட்டீன் உள்ளது. அதுவும் 100 கிராம் கோழி ஈரலில் 116 கலோரிகள் உள்ளன. இவற்றில் 85 புரோட்டீனில் இருந்து நேரடியாக வருகின்றன. எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க நினைப்பவர்கள் கோழி ஈரலையும் தங்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம். 

✅ஆரோக்கியமான இரத்தம்

கோழி ஈரல் உடலின் ஆரோக்கியமான மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதில் ஹீம் இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் கலந்திருப்பதால், இரத்த சோகை அல்லது பிற இரத்த சிவப்பணு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுப் பொருள். கோழி ஈரலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் வேறு எவ்விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

✅வைட்டமின் ஏ அதிகம்

வைட்டமின் ஏ பார்வைக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும், இனப்பெருக்க மண்டலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் வைட்டமின் ஏ இதயம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புக்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இப்படிப்பட்ட வைட்டமின் ஏ கோழி ஈரலில் அதிகமான அளவில் நிறைந்துள்ளன. கோழி ஈரலை வாரந்தோறும் உட்கொண்டு வந்தால் சருமம், நகம், தலைமுடி, கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.