வாரத்தில் இரு முறை தயிர் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உங்களுக்கு தயிர் சாப்பிடுவது அதிகம் பிடிக்குமா? என்னதான் பாலில் இருந்து பல்வேறு விதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும், ஆரோக்கியம் என்று வரும்போது தயிருக்குதான் முதலிடம் கிடைக்கும்.

இப்படிப்பட்ட இந்த தயிரை வாரத்தில் இரு முறை தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மை இருக்கின்றது என்று பார்ப்போம் 

தயிர், கால்சியம் சத்தின் சிறந்த மூலமாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது. சர்க்கரையுடன் தயிரை கலந்து உட்கொள்வது உங்களது கால்சியம் சத்துத் தேவையை பூர்த்தி செய்கிறது.   

✅நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தசை வளர்ச்சியைத் தூண்டவும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும், ஆரோக்கியமான சருமம் முடி மற்றும் நகங்களை பராமரிக்கவும் புரதம் அவசியம். தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவதன் மூலம் ஒரு சுவையான புரதம் நிறைந்த உணவை உருவாக்கலாம். இது உங்களை புரதத்தை விரும்பி சாப்பிட ஊக்குவிக்கும்.

✅மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்

ஆயுர்வேத மருத்துவத்தில் தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. தயிர் மற்றும் சர்க்கரைக் கலவையானது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரித்து, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்.  

வாரம் இருமுறையாவது தயிர் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என்னதான் இது உடலுக்கு நல்லது என்றாலும், உடற்பெருமனால் அவதிப்படுபவர்கள் இப்படி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இதில் அதிக கலோரி இருப்பதால், உங்களது உடல் எடையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே சமச்சீர் உணவின் ஒரு அங்கமாக இதைப் பயன்படுத்துவது நல்லது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.