நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும்

தினமும் கணினி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நம்பில் பலருக்கு கண் பராமரிப்பை பற்றி தெரியாமலே இருக்கின்றது அவ்வாறு கண் பார்வையை பாதுகாக்க தினசரி செயல்பாடுகளின் போதும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிய குறிப்புகள் என்ன என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

✅போதுமான அளவு தூக்கம் 

போதுமான அளவு தூக்கம் கண்ணுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தினமும் 7 - 8 மணித்தியாலங்கள் தூங்க வேண்டும் என்பது கட்டாய தேவை. நீங்கள் விழித்திருக்கும் வரையில், உங்கள் கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதால், உங்கள் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாமை, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள், கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்

✅கூலிங் கிளாஸ்கள்​ பயன்படுத்தல்

நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் UV பாதுகாப்பு சன்கிளாஸ்களைப் பயன்படுத்த மறக்க கூடாது. அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாஸின் லென்ஸ்கள் 99% முதல் 100% UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

✅கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது

கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கக்கூடிய அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்று உண்டு செய்யலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும் போது அது கிழியவும் வாய்ப்புள்ளது.

வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கைகால்களை சுத்தம் செய்யவேண்டும். உங்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி துகள் ஏதேனும் இருப்பின், அவை உங்கள் கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.

✅நீரேற்றம் மற்றும் உணவு முறை

உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு அது கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும்.குறிப்பாக ஒமேகா- 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.

✅​கண்களின் பாதிப்பை தடுத்து கணினி பார்க்கும் சரியான முறை​

கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மற்றும் லேப்டாப் திரைகள் உங்கள் கண்களில் இருந்து ஒரு கை தூரத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் கண் மட்டத்திலிருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும் போது, ​​உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும். விளக்கு வெளிச்சத்தில் பணிபுரிவதாக இருந்தால், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

✅​கண்களின் பாதிப்பை தடுக்கும்  விதிமுறை​

அதிக திரைநேரம் இருப்பதாக தோன்றும்போது தவறாமல், 20-20-20 விதியைப் பின்பற்றவும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், உங்கள் கணினியிலிருந்து பார்வையை விலக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது 20 வினாடிகள் பார்வையை நிலைநிறுத்தவும். வறட்சியைத் தடுக்க அடிக்கடி கண் சிமிட்டவும். அதேபோல ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்துகிறது.

✅கண் பரிசோதனை

உங்கள் கண்களை குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் பரிசோதிக்க வேணும். சில சமயங்களில் கண் கோளாறுகள், அறிகுறிகள் இன்றி உருவாக கூடும் என்பதால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். அதே போன்று கண்ணாடி அணிபவராக இருந்தாலும் லென்ஸ் அணிந்தாலும் கண்களின் பவர்-ஐ அவ்வப்போது பரிசோதித்து கொள்வதும் கண் பார்வை குறைபாடு தீவிரத்தை தடுக்க உதவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.