மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முழுமையாக சேதமடைந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு இன்று வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபவை செலவிட்டுள்ளது.

மேலும் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டது.

இழந்த விடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் பெறுமதி கூடிய வீடுகளுக்கு மேலதிக தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில்பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக, வஜிர அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.