நுவரெலியா- ஹட்டன் பகுதியில் மேலும் 10பேருக்கு கொரோனா.

நுவரெலியா- ஹட்டன் பகுதியில் மேலும் 10பேருக்கு கொரோனா.

நுவரெலியா- ஹற்றன் பகுதியில் மேலும் 10பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஹற்றன்- டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஹற்றன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 10பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், குறித்த நபரின் குடும்பத்தினர் நால்வர் உட்பட மேலும் ஆறு பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹற்றன் நகரை முழுமையாக மூடி, கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.