20 க்கு ஆதரவாக வாக்களித்த 9 பேரும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டனர்.

 20 க்கு ஆதரவாக வாக்களித்த 9 பேரும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டனர்.20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக

 வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.


இதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடிதமொன்றினூடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது.


இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர்.


👉டயனா கமகே

👉அருணாசலம் அரவிந்த குமார்

👉இஷாக் ரஹ்மான்

👉பைசல் காசிம்

👉H.M.M.ஹாரிஸ்,

👉M.S.தௌபீக்,

👉நசீர் அஹமட்

👉A.A.S.M. ரஹீம்

👉M.M.M. முஷாரப்


ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.


இந்த உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வரிசையிலிருந்து நீக்கி, ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சியின் பிரதம கொறடா கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.