நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கும் கொரோனா தொற்றா ? இராணுவ தளபதியின் பதில்.

 நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கும் கொரோனா தொற்றா ? இராணுவ தளபதியின் பதில்.



சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 

கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.


இலங்கையில் உள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் குழுவே எம்முடன் உள்ளனர். எனக்கு வைத்தியர்கள் கூறுவதை தான் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருக்கும் நெருக்கிய தொடர்பில் இருந்தவர்களினால் தான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.


அதனால் தான் சமூகத்தில் கொரோனா தொற்று இல்லை என அவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


நேற்று இரவு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். சாதாரண நோய் நிலமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.


இருப்பினும் இப்போது உயிரிழக்கும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குறித்த இரு மரணங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.