2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர் பரீட்சைக்கான ஸ்செட் புள்ளி இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது

 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர் பரீட்சைக்கான ஸ்செட் புள்ளி இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது.



பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஸ்செட் புள்ளி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையபக்கமான www.ugc.ac.lk யில் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இந்த முறை 41 ஆயிரத்து 500 மாணவர்களை அரச பல்கலைகழகங்களில் இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட விசேட துறைகளுக்கு இணைத்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்று உள்ளிட்ட சில காரணிகளால் ஸ்செட் புள்ளியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.