காலியில் 43பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

 

காலியில் 43பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

காலி மாவட்டத்தில் இதுவரை 43பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் பெலியகொட மீன் சந்தை பகுதிகளுக்கு சென்று, திரும்பியவர்களினாலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

காலியிலும் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணமென தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வேணுர கே.சிங்காராய்ச்சி மேலும் கூறியுள்ளதாவது,

“கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புபட்ட 32பேருக்கும் பெலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 11பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி பலபிட்டிய- கடுவில பகுதியில் 582 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவர்களில் 362 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 175 பி.சி.ஆர்.சோதனைகள் செய்யப்பட உள்ளன.

இதுவரை எல்பிட்டியவில் ஒருவருக்கும், கரண்தெனியவில் ஒருவருக்கும், இதுருவேயில் 2பேரும், ரத்கமவில் 4 பேருக்கும்,

காலி நகராட்சி பகுதியில் 4 பேருக்கும் சுகாதாரப் பிரிவின் பலபிட்டி வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குள் 32 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.