கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

 கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.


மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழைச்சேனை ஓட்டுமாவடி பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 27 பேருக்கு கொரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கிழக்கில் இதுவரைக்கும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் கடந்த (24) சனிக்கிழமை மேற்கொண்ட பி.சி.ஆர். பிரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பிரதேசம் உரடங்கு சட்டம் பிற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்படடதையடுத்து கிழக்கில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.