மனோவின் அறிவிப்பு..

 20 க்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்துகிறேன் ; மனோ கணேசன் அறிவிப்புதமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்னும் சற்று நேரத்தில்

கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலை​வர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரவிந்தகுமார் தொடர்பான மேல்நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர். எனினும், அ.அரவிந்தகுமார் மட்டும் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.