மீன் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

 மீன் விற்பனை நிலையங்களுக்கு பூட்டுஅக்டோபர் 23,2020 வெள்ளி


பேலியகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாகலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்களை சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


பேலிகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு விற்பனை செய்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்களே ஹட்டன் மற்றும் தலவாகலை லிந்துலை நகரசபையினால் இன்று (23) இவ்வாறு மூடப்பட்டுள்ளது.


மேலும் பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்த டிக்கோயா, தரவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் டிக்கோயா தரவளை வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


எனினும் குறித்த இளைஞன் ஒரு மாத காலமாக டிக்கோயா தரவளை வீட்டிற்கு வரவில்லை என சுகாதாத பரிசோதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.