ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படுவதில் கட்டுப்பாடு.

ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படுவதில் கட்டுப்பாடு.

Add caption
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக்கான கடமையில் ஈடுபடும் ஊழியர்களை தவிர வேறு யாருக்காகவும் ரயில், தெமடகொட மற்றும் மருதானை ரயில்
நிலையங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கடுகுருந்த மற்றும் பெந்தொட்ட இடையிலான ரயில் நிலையங்களிலும் ரயில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (23) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொட, மருதானை பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (23) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குலவிட வடக்கு, குலவிட தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில, மாக்கலந்தாவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.